என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மார்ட்டின் கப்தில்
நீங்கள் தேடியது "மார்ட்டின் கப்தில்"
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 110 டி20 போட்டிகளில் விளையாடி 3,141 ரன்கள் சேர்த்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ராஞ்சி:
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 87 போட்டிகளில் விளையாடி 3,227 ரன்கள் எடுத்து முதலிடம் வகித்தார். இதில் 29 அரை சதங்கள் அடங்கும்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 31 ரன்னில் அவுட்டானார். அவர் டி20 கிரிக்கெட்டில் 107 போட்டிகளில் விளையாடி 3,248 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதம், 19 அரை சதங்கள் அடங்கும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியை முந்தி கப்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...முதல் டி20 போட்டியில் ஹசன் அலி அபாரம் - வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
புவனேஷ்வர் குமார், அஸ்வின் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட் வீழ்த்த தீபக் சாஹர் 42 ரன்களும், முகமது சிராஜ் 39 ரன்களும் வாரி வழங்கினர்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யர் அறிமுகம் ஆனார்.
நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிட்செல் சந்தித்த முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் புவி வீசிய முதல் ஓவரில் க்ளீன் போல்டானார். அடுத்து மார்ட்டின் கப்தில் உடன் மார்க் சாம்மேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சாப்மேன் 50 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்ட்டின் கப்தில் 42 பந்தில 70 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் விளாசியது. இதனால் நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் அடித்துள்ளது.
புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், அஸ்வின் 4 ஓவரில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முகமது சிராஜ் 39 ரன்களும், தீபக் சாஹர் 42 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
வங்காளதேச அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் சதம் விளாசினார். #NZvBAN
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. இதில் மேகமூட்டமான சீதோஷ்ண நிலைக்கு மத்தியில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 49.4 ஓவர்களில் 226 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக முகமது மிதுன் 57 ரன்களும், சபிர் ரஹ்மான் 43 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டுகளும், டாட் ஆஸ்ட்லே, ஜேம்ஸ் நீஷம் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 36.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 229 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் சதம் நொறுக்கிய தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 118 ரன்கள் (88 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.
இது அவரது 16-வது சதமாகும். கேப்டன் கேன் வில்லியம்சன் அரைசதம் (65 ரன்) அடித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. முதலாவது ஆட்டத்திலும் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 20-ந்தேதி டுனெடினில் நடக்கிறது.

நேப்பியரில் நடைபெற்ற வங்காளதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZvBAN
நேப்பியர்:
வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்கள் அடித்து ‘ஆல்அவுட்’ ஆனது. முகமது மிதுன் அதிகபட்சமாக 62 ரன்னும், முகமது சாய்புதீன் 41 ரன்னும் எடுத்தனர். போல்ட், சான்ட்னெர் தலா 3 விக்கெட்டும் பெர்குசன், ஹென்ரி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 233 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், நிக்கோல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் அடித்த நிக்கோல்ஸ் அணியின் ஸ்கோர் 103-ஆக இருக்கும்போது 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு மார்ட்டின் கப்தில் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். மார்ட்டின் கப்தில் 116 பந்தில் 117 ரன்களும், ராஸ் டெய்லர் 49 பந்தில் 45 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து 44.3 ஓவரில் 2 விக்கெட் இழபபிற்கு 233 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சதமடித்த மார்ட்டின் கப்தில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஆட்டம் கிறிஸ்ட்சர்ச்சில் வருகிற 16-ந்தேதி நடக்கிறது.

ஆக்லாந்தில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ரோகித் சர்மா 28 பந்தில் அரைசதம் அடித்ததுடன் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். #RohitSharma
ஆக்லாந்து:
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது.
தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மா 35 ரன்னைத் தொட்டபோது சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்திருந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை (2272) பின்னுக்குத்தள்ளி முதல் இடம்பிடித்தார்.
இந்த போட்டிக்கு முன் ரோகித் சர்மா 2238 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் இருந்தார். இந்த போட்டியில் 50 ரன்கள் அடித்ததன் மூலம் 2288 ரன்கள் சேர்த்துள்ளார். ஹிட்மேன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் 4 சதம், 15 அரைசதம் விளாசியுள்ளார். பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2263 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

×

X